News February 1, 2026
இவர்களே பட்ஜெட்டின் எழுத்தாளர்கள்!

மேலே உள்ள போட்டோவில் இருப்பவர்கள்தான் மத்திய பட்ஜெட்டை வரையறுத்தவர்கள். (இடதில் இருந்து வலமாக) பொருளாதார விவகாரங்கள் செயலாளர் அனுராதா தாகூர், வருவாய்த்துறை செயலாளர் அரவிந்த் ஸ்ரீவஸ்தவா, செலவினச் செயலர் வும்லுன்மாங் வுவல்னம், நிதிச் சேவைகள் செயலாளர் நாகராஜு, முதலீட்டுத் துறை செயலர் அருணிஷ் சாவ்லா, பொது நிறுவனங்களின் செயலர் கே மோசஸ், தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன்.
Similar News
News February 3, 2026
விஜய் டான்ஸ் மட்டுமே ஆடட்டும்: நயினார்

NDA கூட்டணி குறித்த விஜய்யின் விமர்சனத்திற்கு நயினார் பதிலடி கொடுத்துள்ளார். எந்தவொரு விஷயமும் தெரியாமல் விஜய் நடனமாடிக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு தமிழ்நாட்டின் கலாசாரம் தெரியாமல் விஜய் டான்ஸ் ஆடுவதாக குறிப்பிட்ட நயினார்,
கடைசி வரை அவர் டான்ஸ் ஆடிக்கொண்டு தான் இருக்க வேண்டும் எனவும் விமர்சித்துள்ளார்.
News February 3, 2026
‘$500 பில்லியன்’ US பொருள்களை வாங்கும் இந்தியா

அமெரிக்க பொருள்களை அதிகளவில் வாங்க PM மோடி ஒப்புக்கொண்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். நேற்று <<19035190>>இந்திய பொருள்கள்<<>> மீதான வரியை 18% ஆக டிரம்ப் குறைத்தார். இதனிடையே, 500 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்காவிடம் இருந்து தொழில்நுட்ப, விவசாயம், நிலக்கரி பொருள்களை இந்தியா வாங்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தத்தால், இந்தியாவுடனான உறவு மேலும் வலுப்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News February 3, 2026
அப்பா இறந்துவிட்டார்.. கார் ஓட்டுநரின் பலே மோசடி

பிறரின் அனுதாபத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கில் கொள்ளையடித்த சென்னை கார் டிரைவர் வசமாக சிக்கினார். கார் பயணத்தின் போது அந்நபரின் போனில், உன் அப்பா இறந்துவிட்டார்; பணம் தேவைப்படுகிறது என வாய்ஸ் ஒலித்துள்ளது. செய்வதறியாமல் அவர் நடிப்பதை நம்பி ஒவ்வொரு பயணியும் ₹10000, ₹20000 தந்து உதவியுள்ளனர். இவரது நாடகத்தை கண்டுபிடித்த வக்கில் ஒருவர் போலீசில் புகாரளித்திட, குற்றத்தை கார் ஓட்டுநர் ஒப்புக்கொண்டார்.


