News January 24, 2026
இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது

மகளிர் உரிமைத்தொகை ₹1000 பெறும் பெண்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, வேலைவாய்ப்பற்றோருக்கான மாத உதவித்தொகை திட்டத்தில் பயனாளியாக உள்ள பெண்கள், உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது. எனவே, இந்த இரு திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே உதவித்தொகை பெற முடியும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஏழை, எளிய குடும்ப பெண்கள், இதில் ஒன்றை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
Similar News
News January 30, 2026
ரயிலில் கணிதம் படித்து விஞ்ஞானி ஆனவர்!

கிடைக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்தினால், யாரும் வாழ்வில் வெற்றி பெறலாம் என்பதற்கு ஆரோக்கியசாமி வேலுமணி ஒரு உதாரணம். கோவையை சேர்ந்த இவர், வெகு தொலைவில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் படித்துள்ளார். வறுமையின் காரணமாக ஹாஸ்டலில் தங்க முடியாமல் தினமும் 6 மணிநேரம் ரயிலில் பயணித்தவர், அப்போது கணிதம் & இயற்பியல் படிக்க தொடங்கியுள்ளார். அதுவே அவரை தற்போது BARC விஞ்ஞானியாக மாற்றியுள்ளது.
News January 30, 2026
வங்கி கணக்கில் ₹10,000.. பள்ளி மாணவர்களே ரெடியா!

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான முதல்வரின் திறனாய்வுத் தேர்வு தமிழகம் முழுவதும் நாளை(ஜன.31) நடைபெற உள்ளது. இதில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு +2 முடிக்கும் வரை ஆண்டுக்கு ₹10,000 உதவித் தொகையை அரசு வழங்கும். முதல் தாள் தேர்வு (கணிதம்) காலை 10 – 12 மணி வரையும், 2-ம் தாள் தேர்வு (அறிவியல், சமூக அறிவியல்) மதியம் 2 – 4 மணி வரை நடைபெறும். ALL THE BEST மாணவர்களே!
News January 30, 2026
CINEMA 360°: ₹150 கோடி வசூலித்த நிவின் பாலியின் படம்

*ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். *துல்கர் சல்மானின் ‘ஆகாசம்சோ ஓக தாரா’ படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். *நிவின் பாலியின் ‘சர்வம் மாயா’ படம் ₹150 கோடியை வசூலித்துள்ளது. *‘ஹிட் 3’ படத்தில் நடித்த கோமலி பிரசாத் ‘மண்டவெட்டி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.


