News March 20, 2024
இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்துகள் ஜப்தி
காரமடையை சேர்ந்த 4 பேர் கடந்த 2019-ஆம் தேதி தனியார் பேருந்தில் காரமடைக்கு சென்றனர். அப்போது, எதிரே வந்த அரசு பேருந்து மோதி 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இவ்வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம் 4 பேருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இதற்கான உரிய இழப்பீடு வழங்காததால் 4 அரசு பேருந்துகள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.
Similar News
News November 19, 2024
கோவை: அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
2024-2025 ஆம் நிதியாண்டில் கோவை மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி இவ்விருதுக்கு தகுதியான நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் (22.11.2024)-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
பெண் எஸ்பிக்கு மிரட்டல்: கோவை விசிக தலைவர் கைது
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண் கூடுதல் காவல் கண்காணிப்பாளரை, செல்போனில் அழைத்து தகாத வார்த்தையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் அசோக் குமாரை கைது செய்துள்ள காவல்துறையினர் இது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News November 19, 2024
கோவையில் சர்வதேச கார் பந்தய மைதானம் ரெடி
கருமத்தம்பட்டி அருகே ரூ.50 கோடி மதிப்பீட்டில் 111 ஏக்கரில் பாதுகாப்பு அம்சங்களுடன், அதிவேகம், தாக்குப்பிடிக்கும் திறன் உள்ளிட்ட சோதனைகளுக்கு ஏற்ற சர்வதேச தரத்திலான கார் பந்தய மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் மதியம் 12 முதல் இரவு 9 மணி வரையும், வார இறுதி நாட்களில் காலை 10 முதல் இரவு 9 மணி வரை இதில் பயிற்சி பெறலாம் என டிராக் ஹெட் விசால் அரவிந்த் தெரிவித்துள்ளார்.