News November 26, 2025

இளையராஜாவுக்கு நன்றி என்று போடலாமே: கங்கை அமரன்

image

இளையராஜாவிடம் கேட்டாலே அவருடைய பாடல்களுக்கு காப்பிரைட் கொடுத்துவிடுவார் என கங்கை அமரன் கூறியுள்ளார். தான் இசையமைத்த பாடல்கள் வேறு படங்களில் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக இளையராஜா காப்பிரைட் வழக்கு தொடர்வது விமர்சனத்திற்கு உள்ளாகிறது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கங்கை அமரன், படத்தில் இந்த பாடலை வழங்கிய இளையராஜாவுக்கு நன்றி என்று போட்டால் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினார்.

Similar News

News April 3, 2026

தீபாவளி டபுள் ட்ரீட்.. சிம்புவுடன் ஸ்பேரிங் போடும் SK!

image

சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில்தான் தற்போது ‘தாய்கிழவி’ சிவகுமார் முருகேசன் இயக்கி வரும் ‘சேயோன்’ படமும் தீபாவளிக்கு ரிலீசாகலாம் என தகவல் வெளிவந்துள்ளது. மீண்டும் ‘அமரன்’ போன்ற ஹிட்டை கொடுக்க நினைக்கும் SK, அரசனுடன் மோதி ஜெயிப்பாரா?

News April 3, 2026

வேட்புமனு நிராகரிப்பில் இருந்து விஜய் தப்பிக்க இதுதான் வழி

image

பெரம்பூரில் விஜய் சமர்ப்பித்த வேட்புமனுவில் (<<19552701>>வழக்கு குறிப்பிடாதது<<>>) குளறுபடி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாம். இருப்பினும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் (ஏப்.6) இன்னும் முடிவடையாததால், திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்வதன் மூலம் வேட்புமனு நிராகரிப்பில் இருந்து விஜய் தப்பிக்க முடியும் என கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>

News April 3, 2026

EPS மீது அதிருப்தி.. ஜெ., பற்றி பதிவிட்ட தனபால்

image

EPS ஆட்சியை காப்பாற்றி தந்த தனக்கு சீட் வழங்கவில்லை என ஆதங்கமாக <<19549090>>பேசிய தனபால்<<>> தற்போது ஜெ., பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். 1988-ல் தனக்கு விபத்து ஏற்பட்ட சம்பவத்தை நினைவுக்கூர்ந்த அவர், அப்போது விபத்து நடந்த இடத்திற்கு ஜெ., வந்து, தன்னை ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார். இதன்மூலம், அம்மாவின் அன்பு தெரிவதாகவும் அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!