News May 6, 2024

இளைஞா் அடித்து கொலை: தந்தை, மகன் கைது

image

சீலையம்பட்டி முல்லைப் பெரியாற்றின் கரையோரத்தில் ஆண் சடலம் கிடப்பதாக சின்னமனூா் போலீஸாருக்கு நேற்று (மே.5) தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாா் அவரது உடலை மீட்டு நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவா் சீலையம்பட்டியை சேர்ந்த முனியப்பன் என்பதும், அவரை அவரது சித்தப்பா மலைராஜா, அவரது மகன் பவுன்ராஜா ஆகியோர் அடுத்து கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News August 19, 2025

தேனியில் 296 கடைகளுக்கு சீல் வைப்பு

image

தேனி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 255 கிலோ கஞ்சா, 163 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு 271 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் புகையிலை விற்பனை செய்த 296 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.75, 25,000 அபராதம் விதிக்கப்பட்டு சுமார் 2042.86 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து 35 குற்றவாளிகள் கைது செய்துள்ளனர் என தேனி எஸ்பி சினேகா சினேஹாபிரியா தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

image

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய (ஆக.19) நீர்மட்டம்: வைகை அணை: 69.65 (71) அடி, வரத்து: 735 க.அடி, திறப்பு: 869  க.அடி, பெரியாறு அணை: 134.85 (142) அடி, வரத்து: 2769 க.அடி, திறப்பு: 1000 க.அடி, மஞ்சளார் அணை: 38.80 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 46.14 (126.28) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 49.90 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.

News August 19, 2025

தேனி: தேர்வு கிடையாது! ரயில்வே துறையில் வேலை APPLY

image

தேனி இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – 15 முதல் 25 ஆண்டுகள். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். https://rrccr.com/ என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய <>இங்கே கிளிக்<<>> செய்யவும்.

error: Content is protected !!