News July 5, 2025
இளைஞர் கொலை – காதல் விவகாரம் என தகவல்

சிவகங்கை- மேலூர் ரோடு,புதுப்பட்டி அருகே நேற்று இரவு (4.7.25) நடந்த கொலை வழக்கு தொடர்பாக சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், உறவினர்களுக்கு இடையேயான காதல் விவகாரம் தொடர்பான முன் விரோதத்தால் கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Similar News
News December 11, 2025
சிவகங்கை: மருந்து குடித்து விவசாயி தற்கொலை

ஆடம்பன்குடி பகுதியை சேர்ந்த செல்லையா விவசாயம் செய்து வருகிறார். சிறுநீரக கோளாறு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர், களைக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், அவர் உயிரிழந்தார். சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 11, 2025
சிவகங்கை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

சிவகங்கையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 11, 2025
சிவங்கை: வாக்காளர்களே.. இன்றே கடைசி!

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க <


