News March 19, 2025
இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி

மயிலாடுதுறையில் இளநிலை பொறியியல் பட்டைய படிப்பு (BE) முடித்த ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்கள் புத்தாக்க பொறியாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இப்பயிற்சி பெற்ற 28 இளைஞர்கள் தனியார் முன்னணி நிறுவனங்களில் உயர்பதவிகளில் பணிபுரிந்து வருகின்றனர். தகுதியுடையவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News April 9, 2025
மயிலாடுதுறை: டாஸ்மாக் இயங்காது

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை ஏப்.10 ஒருநாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில், தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் உலர்தினமாக நாளை விடுமுறை என தெருவித்துள்ளார்.
News April 9, 2025
மயிலாடுதுறை: ரூ.50 லட்சம் வரை மானியம் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரையும், செம்மறி ஆடு, வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையும், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையும் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
News April 9, 2025
மயிலாடுதுறை: ரயில் வழித்தடத்தில் மாற்றம்

செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை வரை இயக்கப்படும் ரயிலானது, நாளை விருதுநகரிலிருந்து மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மறுமார்க்கமாக மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் அன்றைய தினம் வழக்கமான பாதையில் மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.