News March 7, 2025
இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு: ChatGPT பயிற்சி

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், இதில் தொழில்முனைவோருக்கான ஒருநாள் “ChatGPT”பயிற்சி வகுப்பு நாளை (மார்ச்.08) திருச்சி, அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற உள்ளது. இதில் ஸ்டார்ப் நிறுவனர்கள், தொழிமுனைவோர் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு www.editn.in என்ற இணையம், 9894920819/ 9080609808 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். SHARE NOW.
Similar News
News November 7, 2025
புதுகை: திருமணத்திற்கு தங்கம் வேண்டுமா?

புதுகை மாவட்ட மக்களே! ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 2) இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும். 3) திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். 4) திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 7, 2025
புதுகை: அமைச்சர்கள் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர்-10 தேதி அன்று புதுகை மாவட்டத்திற்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தருவதை முன்னிட்டு கீரனூர் கல்லூரி பகுதியில் இன்று அமைச்சர்கள் கே.என்.நேரு, சிவ.வீ.மெய்யநாதன், எஸ்.ரகுபதி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். நிகழ்வில் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News November 7, 2025
புதுகை: நாயால் பறிபோன உயிர்

மீமிசலிலிருந்து செய்யானத்திற்கு நேற்று ஜான் பீட்டர் மற்றும் அவரது மனைவி நிர்மலா(48) ஆகிய இருவரும் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, மெய்யானம் மறவர் குடியிருப்பு சாலையில் நாய் குறுக்கே வந்ததில் பைக்கில் இருந்து தவறி விழுந்த நிர்மலாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மீமிசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


