News December 30, 2025

இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது: விஜய்

image

திருத்தணியில் வடமாநில இளைஞர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே இந்த சம்பவம் ஏற்படுத்தி உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருள்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது என்றும் விமர்சித்துள்ளார்.

Similar News

News January 2, 2026

புதிய புயல் சின்னம்.. கனமழை வெளுத்து வாங்கும்

image

புத்தாண்டு அன்றே தென் மாவட்டங்கள், சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் ஜன.6-ஐ ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால் டெல்டா & தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு குறைவு என்றும் IMD தெரிவித்துள்ளது.

News January 2, 2026

மீண்டும் வருகிறது BTS!

image

உலகமெங்கும், குறிப்பாக இந்தியாவில் BTS-க்கு ரசிகர்கள் அதிகம். கட்டாய ராணுவ சேவை உள்ளிட்டவற்றால், 2022-க்கு பின் BTS குழுவாக எந்த பாடலையும் வெளியிடவில்லை. 4 ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு புத்தாண்டில் இனிப்பான செய்தி வந்துள்ளது! மார்ச் 20-ல் BTS-ன் புதிய ஆல்பம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, <<18699958>>Wold Tour<<>> பற்றியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

News January 2, 2026

BREAKING: தங்கம் விலை மிகப்பெரிய மாற்றம்

image

தங்கம் விலை இன்று (ஜன.2) 22 கேரட் கிராமுக்கு ₹140 உயர்ந்து ₹12,580-க்கும், சவரன் ₹1,120 உயர்ந்து ₹1,00,640-க்கும் விற்பனையாகிறது. புத்தாண்டின் முதல் நாள் தங்கம் விலை சரிவுடன் தொடங்கிய நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

error: Content is protected !!