News May 7, 2025
இளைஞர்களின் இன்ஸ்பிரஷன் நம்ம கலெக்டர்

விருதுநகர் மாவட்டத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து முதல் பட்டதாரியாகவும், முதல் அரசு அதிகாரியாகவும், திருவள்ளூரின் 24வது ஆட்சியராகவும் உள்ளார் பிரதாப். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பின் தன் நடவடிக்கைளால் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். அண்ணா பல்கலையில் பட்டம் பெற்று முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பிரதாப் தான் இடது பலருக்கு முன்னுதாரணம். ஷேர் பண்ணுங்க
Similar News
News September 16, 2025
விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்ட காவல் ஆணையர்

ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து இளைஞர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்
நோக்கில் நடிகர் பாஸ்கர் நடித்துள்ள “நில் கவனி நேசி” என்னும் விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த குறும்படத்தை ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் வெளியிட்டார்.
போக்குவரத்து விதிகள் சம்பந்தமாக வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது
News September 16, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
News September 16, 2025
மகளிர் சுய உதவிக் குழுகளுக்கு வங்கிக் கடன்

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் மு.பிரதாப் மற்றும் திருவள்ளுர் சட்ட மன்ற உறுப்பினர் வி.ஜி.இராஜேந்திரன், ஆகியோர் 15757 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.167.50 கோடி வங்கிக் கடன் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கினர். உடன் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.