News March 20, 2024
இளம் விஞ்ஞானிகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க<
Similar News
News December 28, 2025
கரூருக்கு பெருமை சேர்த்த வீராங்கனை!

51 வது ஜூனியர் பெண்கள் கபடி போட்டியில் தமிழக அணியில் விளையாடுவதற்காக கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாணவி ஷா.மதினா பேகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 6வது முறையாக தமிழக அணிக்காக விளையாட உள்ளார். இவருக்கு கல்லூரி முதல்வர் நடேசன் மற்றும் செயலாளர் கண்ணன் ஆகியோரும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறை சார்ந்த நிர்வாகிகளும் பாராட்டுக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
News December 28, 2025
கரூர்: வாடகை வீட்டில் இருப்பவரா நீங்கள்?

கரூர் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க)
News December 28, 2025
குளித்தலையில் 7 பேர் அதிரடி கைது!

கரூர் மாவட்டம் குளித்தலை, லாலாபேட்டை, சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி, தோகைமலை, நங்கவரம், மாயனூர் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்தது. தகவல் அறிந்து சென்ற போலீசார் கண்ணன் (61), பிரகாஷ் (27), பழனிச்சாமி (46), முத்துசாமி (69), குமரவேல் (49), சக்திவேல் (60) உள்ளிட்ட 7 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 169 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


