News December 15, 2025
இளம் வயதினர் மரணங்களுக்கு Corona தடுப்பூசி காரணமா?

இளம் வயதினர் திடீரென மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்பது குறித்து டெல்லி எய்ம்ஸ் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிக்கும், இளம் வயதினரின் திடீர் மரணத்திற்கு தொடர்பு இல்லை என எய்ம்ஸ் டாக்டர் சுதிர் அரவா தெரிவித்துள்ளார். இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு இன்றைய வாழ்க்கை முறை, மதுப்பழக்கம் ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News December 20, 2025
பிக்பாஸில் இந்த வார எவிக்ஷன்.. இவர் தானா?

பிக்பாஸ் சீசன்-9, 75 நாள்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இதுவரை 11 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் 12 பேர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். Unofficial voting-ல் குறைந்த வாக்குகளை பெற்றிருப்பதால் இந்த வாரம் ஆதிரை அல்லது FJ வெளியேற்றப்படலாம் என கூறப்படுகிறது. ஆதிரை ஏற்கெனவே வெளியேறி அதன்பின் வைல்டு கார்டு போட்டியாளராக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 20, 2025
தட்கல் டிக்கெட் எடுப்பதில் சிரமமா? இதோ வழி

அவசர பயணங்களுக்காக தட்கல் புக்கிங் செய்தால், டிக்கெட் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. இதை தவிர்க்க IRCTC-ன் E-Wallet பயன்படுத்துங்கள். *நொடிப்பொழுதில் நேரடியாக டிக்கெட் புக் ஆகும் *Payment failure வாய்ப்பும் குறைவு *டிக்கெட் ரத்தானாலும், உடனடியாக Wallet-ல் பணம் வரும். எனினும், பணத்தை Withdraw செய்ய முடியாது என IRCTC கூறுகிறது. வழக்கமாக Bank Transaction ரத்தானால் பணம் வருவதற்கு 1-2 நாள்கள் எடுக்கும்.
News December 20, 2025
இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறை!

பாக்., Ex., PM இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு, தோஷாகானா <<12968812>>ஊழல் வழக்கில்<<>> 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கெனவே மற்றொரு வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளனர். முன்னதாக இம்ரான் கான் சிறையில் துன்புறுத்தப்படுவதாக அவரின் மகன்கள் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.


