News January 24, 2025
இளம் பெண் தற்கொலை போலீசார் விசாரணை

போடியை சேர்ந்தவர் வர்ஷாஸ்ரீ (19). இவர் கல்லூரிக்கு சென்ற வந்த நிலையில் படிப்பு சரிவராத காரணத்தினால் பொங்கலுக்கு பின் கல்லூரி செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது பெற்றோர்கள் அவருக்கு வரன் பார்த்த நிலையில் அதில் அவருக்கு விருப்பம் இல்லாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாக வர்ஷா ஸ்ரீ நேற்று (ஜன.23) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள் இதுகுறித்து போடி போலீசார் விசாரணை.
Similar News
News December 19, 2025
தேனியில் கஞ்சா பதுக்கிய பெண்கள் கைது!

கம்பம் தெற்கு போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (டிச.18) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் பையுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த பேச்சியம்மாள், ராஜகுமாரி ஆகியோரை சோதனை செய்த பொழுது அவர்கள் இருவரும் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
News December 19, 2025
தேனி: மகனை கொலை செய்த தந்தைக்கு தண்டனை

குச்சனுார் பகுதியை சேர்ந்த தம்பதியர் மணிகண்டன், வீரலட்சுமி. இவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றனர். மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் மணிகண்டன் அவரது தந்தை ரெங்கனுடன் 2024 ஜன.16 அன்று மது போதையில் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரெங்கன் மணிகண்டனை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். போலீசார் ரெங்கனை கைது செய்தனர். இவ்வழக்கு குறித்த விசாரணையில் ரெங்கனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு.
News December 19, 2025
தேனி: பைக், கார் பெயர் மாற்ற – CLICK பண்ணுங்க!

நீங்கள் வாங்கிய பழைய பைக், காரை உங்கள் பெயருக்கு மாற்றனுமா? அதை மாற்ற RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) ஃபார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனிலேயே மாற்ற வழி உண்டு.
1. இங்கு <
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!


