News March 30, 2024

இளம் பெண்னை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது.

image

திருச்சி ராம்ஜி நகர் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (18) இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளம்பெண் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்டு நேற்று தண்ணீர கேட்பது போல் சென்று பலாத்காரம் செய்ய முயன்றார். இளம் பெண் சத்தம் கேட்டு பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் வாலிபர் தப்பி ஓடினார்.புகாரின் பேரில் கன்டோன்மென்ட் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

Similar News

News April 19, 2025

மாநில இளைஞர் விருது – ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழக முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேற்று அறிவித்துள்ளார். மேலும் விண்ணப்ப படிவங்களை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மே 3ம் தேதிக்குள் விளையாட்டு ஆணைய இணையத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளது. SHARE செய்ங்க

News April 19, 2025

போக்குவரத்துக் கழகத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி?

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் 176 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் செய்து<<>>, ஆன்லைனில் விண்ணப்பிக்க என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். அதில் உங்கள் விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 19, 2025

சோமரசம்பேட்டையில் கபடி போட்டிக்கு அழைப்பு

image

திருச்சி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் கபடி போட்டி வரும் மே.3, 4 ஆகிய தேதிகளில் சோமரசம்பேட்டையில் நடைபெற உள்ளது. இதில் முதல் பரிசாக ₹.50,000, 2-ம் பரிசு ₹.30,000, 3-ம் பரிசு ₹.25,000, 4-ம் பரிசு ₹.25,000 வழங்கப்பட உள்ளது. மேலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு சுழற் கோப்பையும் வழங்கப்பட உள்ளது. இதில் சுற்று வட்டார பகுதியில் உள்ள கபடி வீரர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!