News February 27, 2025
இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: நால்வர் கைது

பண்ருட்டி கிராமத்தில் உள்ள தனியாா் சொந்தமான தொழிற்சாலையில், திருச்சி, சாயலூரைச் சோ்ந்த 22 வயது இளம் பெண் கடந்த 6 மாதங்களாக பணிபுரிகிறாா். இவா் தங்கியிருக்கும் அறையிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்றபோது 4 போ் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனர். அப்பெண்ணின் புகாரின் பேரில் காஞ்சிபுரம் மகளிர் போலீசார் ரெங்கா, சந்திரசேகா், சக்தி என்ற சதீஷ்குமாரை கைது செய்தனர். வெங்கடேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
Similar News
News August 25, 2025
காஞ்சிபுரத்தில் நாளை மின்தடை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 25) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, களியாம்பூண்டி மற்றும் மாகரல் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளான திருப்புலிவனம் அழிசூர் களியாம்பூண்டி, மருதம், சிலாம்பாக்கம், மானம்பதி, உத்திரமேரூர் & சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 24, 2025
காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 24, 2025
காஞ்சிபுரம்: ரேஷன் கார்டுதாரர்கள் இத நோட் பண்ணிக்கோங்க

காஞ்சிபுரம் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க