News April 8, 2024
இளம்பெண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பியவர் மீது வழக்கு

நாகமலைபுதுக்கோட்டை அருகே துவரிமான் பகுதியை சேர்ந்த சதீஷ்(வயது 21) என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு தான் காதலிப்பதாக செல்போனில் குறுந்தகவல் அனுப்பினார். இதை அந்த பெண்ணின் தந்தை தட்டி கேட்டுள்ளார். அப்போது சதீஷ் அந்த பெண்ணை திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து நேற்று பெண்ணின் தந்தை அளித்த புகாரில் சதீஷ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
Similar News
News January 28, 2026
மதுரை வேளாண் கல்லூரியில் விதைகள் விற்பனைக்கு தயார்

மதுரை வேளாண் கல்லூரி வேளாண் அறிவியல் நிலையத்தில், விதைச்சான்று துறையால் அங்கீகரிக்கப்பட்ட வம்பன் 8.11 ரக உளுந்து விதைகள் விற்பனைக்கு வந்துள்ளன. மொத்தம் 33 டன் தரமான வீரியம் கொண்ட விதைகள் கையிருப்பில் உள்ளன. விவசாயிகள் நிலையத்திற்கு நேரில் சென்று ஒரு கிலோ ரூ.110-க்கு வாங்கி பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 94420-54780 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News January 28, 2026
மதுரை : ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

மதுரை மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <
News January 28, 2026
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

சோழவந்தான் இரும்பாடி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் 35, இவரது மனைவி விஜய பிரபா 28. இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து விஜய பிரபாவை தாக்கினார். இதில் படுகாயமடைந்த விஜய பிரபா சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோழவந்தான் போலீசார் பிரபாகரனை கைது செய்து விசாரணை.


