News November 11, 2025
இளமையின் ரகசியத்தை பகிர்ந்த மஞ்சு வாரியர்

47 வயதாகும் மஞ்சு வாரியர், இப்போதும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், தனது உடலமைப்பை பேணி வருகிறார். தன்னுடைய இளமையின் ரகசியத்தை அவர் பகிர்ந்துள்ளார். நாள் தவறாமல் ஜிம்முக்கு செல்வதும், நடனம் ஆடுவதும் தான் உடல் ரீதியாக நான் செய்யக்கூடிய பயிற்சிகள். இது தவிர உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகிறேன். இவற்றை தவறாமல் பின்பற்றுவதால் தான் வெயிட் போடாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 11, 2025
நடிகர் ஜாக்கி சான் மரணமா? CLARITY

நடிகர் ஜாக்கி சான் மறைந்துவிட்டதாக சிலர் டிரெண்ட் செய்து வரும் தகவலில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதுபோன்று வதந்தி பரப்பப்படுவது இது முதல்முறை அல்ல. அவரை வெறுக்கும் சிலர் ஏற்கெனவே பலமுறை இறந்தவிட்டதாக இணையத்தில் டிரெண்ட் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் ரசிக்கும் சூப்பர் ஸ்டார் மீது ஏன் இந்த வன்மம் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
News November 11, 2025
சாகச பயணம் செய்ய ஆசையா?

சுற்றுலா செல்பவர்களில் பலருக்கும் சாகச பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகம். அதிலும், Zig Zag சாலைகளை விரும்பாதவர்களே இல்லை எனலாம். அப்படி இந்தியாவில் வளைந்து நெளிந்து ஓடும் பெஸ்ட் Zig Zag சாலைகளை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து அவற்றை பார்க்கவும். இதில், நீங்கள் பயணம் செய்ய வேண்டும் என நினைக்கும் ரோடு எது? கமெண்ட் பண்ணுங்க.
News November 11, 2025
தந்தை-மகன் விரிசலில் இருந்து பாமக கடந்துவிட்டது

தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்ட விரிசலில் இருந்து பாமக கடந்துவிட்டதாக ஸ்ரீகாந்தி தெரிவித்துள்ளார். அன்புமணியின் போட்டி நடவடிக்கைகளுக்கு பிறகு, மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு நடத்தப்பட்டதாக கூறிய அவர், அவரால் எங்களுக்கும் கட்சிக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், மாம்பழ சின்னத்தை பெற முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் நல்ல முடிவு வரும் எனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.


