News July 28, 2024
இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கு பொதுப்பிரிவு (Academic Stream) மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டிலுள்ள 171 காலியிடங்களுக்கு நேரடி கலந்தாய்வு (Offline Counseling) 30.07.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறுகிறது. இதில், மாணவர்கள் கலந்துகொள்ளும்படி கல்லூரி சார்பில் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 12, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (11.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 11, 2026
கோவை சம்பவம்: அன்புமணி கண்டனம்

கோவை அரசு பள்ளி சத்துணவில் பல்லி விழுந்து 44 மாணவர்கள் மயக்கமடைந்த சம்பவத்திற்குப் பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “திமுக அரசு வழங்குவது சத்துணவா அல்லது விஷ உணவா?” என தனது ‘X’ தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினாலும், அசம்பாவிதம் நேர்ந்திருந்தால் என்னவாகியிருக்கும் என நினைக்கவே நெஞ்சம் பதறுவதாக அவர் வேதனையை பகிர்ந்துள்ளார்.
News March 11, 2026
கோவை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

கோவை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <


