News August 16, 2025
இல.கணேசன் மறைவு-புதுச்சேரி முதல்வர் இரங்கல்

முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆளுநர் இல கணேசன் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. தனது வாழ்வின் பெரும் பகுதியைத் தேச நலனுக்காகவும், சமூக சேவைக்காகவும் எளிய மக்களின் நல்வாழ்விற்காகவும் அர்ப்பணித்தவர். அவரது மறைவு தேசத்திற்கு ஒரு பெரிய இழப்பாகும்.” என கூறியுள்ளார்.
Similar News
News March 3, 2026
புதுச்சேரி: இலவச ஸ்மார்ட் மீட்டர் – மின் துறை எச்சரிக்கை

மின்துறை கண்காணிப்பு பொறியாளர் வெளியிட்ட செய்தியில், “புதுச்சேரியில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு இலவசமாக ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் துல்லியமான மின் கட்டணம் மற்றும் மின் தடை ஏற்பட்டால், தானாகவே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் செல்லும் வசதி உள்ளது. இத்திட்டம் தொடர்பாகத் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என உள்ளது.
News March 3, 2026
புதுச்சேரி: இன்று மின்தடை அறிவிப்பு

காரைக்காலில் மின்னழுத்த பாதையில், இன்று (03.02.2026) வழக்கமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக இன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காரைக்கால் பசும்பொன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நுகர்வோர்களுக்கு மின் விநியோகம் முற்றிலும் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
News March 3, 2026
காரைக்கால்: மருத்துவர்கள் வருகை தேதி மாற்றம்

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு வரும் 6.03.2026 (வெள்ளிக்கிழமை) காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா நடைபெற இருப்பதையொட்டி, அடுத்த வாரத்திற்கு (13.03.2026) வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


