News November 3, 2025
இல்லதிற்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம்

பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் இன்று (நவ.03) முதல் 5ம் தேதி வரை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் பயன்பெறும் குடும்ப அட்டைத் தாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 3, 2025
பெரம்பலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!
News November 3, 2025
பெரம்பலூர்: சவுதி அரேபியாவில் பணிபுரிய வாய்ப்பு

சவுதி அரேபியாவில், 2026-ஆம் ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு சேவையாற்ற, மாநில ஹஜ் ஆய்வாளர்களாகத் தற்காலிகமாக பணிபுரிய, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
இதில் பெரம்பலூர் மாவட்டம் தான் முதலிடம்

நெல், நிலக்கடலை, கரும்பு, சோளம், சின்ன வெங்காயம் மற்றும் முந்திரி முதலியவை பெரம்பலூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பயிர்கள் ஆகும். இதில் முக்கியமாக தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் மொத்த சிறிய வெங்காய உற்பத்தியில் 24% பெரம்பலூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படுகிறது. இதன் மூலம் மாநிலத்தில் சின்ன வெங்காய உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க


