News April 10, 2025
இலவம் பஞ்சு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு

கடமலை – மயிலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இலவம் பஞ்சு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு தற்போது அறுவடை காலமாக உள்ளதால், இலவம் பஞ்சு விளைவிக்கும் விவசாயிகள், தங்களது விளைபொருளை அறுவடை செய்து விற்பனை செய்யும் சமயங்களில் உரிய விலை கிடைக்காத பட்சத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையைச் சார்ந்த உள்ளிட்ட அலுவலகங்களில் இருப்பு வைக்கலாம் என்றார்.
Similar News
News April 18, 2025
நடந்து சென்ற தொழிலாளி மீது கார் மோதி பலி

போடி அருகே ராசிங்காபுரம் அழகர் கோயில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் 42. கூலித் தொழிலாளி இவரும் அதே பகுதியை சேர்ந்த கதிரேசன் என்பவரும் தேவாரம் செல்லும் மெயின் ரோட்டில் நேற்று நடந்து சென்றுள்ளனர். பின் பக்கமாக அதிவேகமாக கார் முன்னாள் சென்ற இளங்கோவன், கதிரேசன் மீதும் மோதியதில் சிகிச்சை பலனின்றி இளங்கோவன் இறந்தார். உரிய நிவாரணம் வழங்க கோரி ராசிங்காபுரம் ரோட்டில் உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
News April 17, 2025
தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்.17) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News April 17, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 17) நீர்மட்டம்: வைகை அணை: 56.30 (71) அடி, வரத்து: 110 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 105 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.50 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 97.74 (126.28) அடி, வரத்து: 16.88 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 38.90 (52.55) அடி, வரத்து: 5 க.அடி, திறப்பு: இல்லை.