News January 20, 2026
இலவச மருத்துவ ஆலோசனை வேணுமா? இதோ இருக்கு!

தற்போது மழை காலத்திலிருந்து வெயில் காலம் வந்துள்ளது. இந்த மாற்றம் சிலருக்கு ஜுரம் போன்ற ஆரோக்கிய பிரச்னைகளை உண்டாக்கலாம். நீங்கள் வீட்டிலிருந்தபடியே அப்போலோ மருத்துவர்களின் இலவச ஆலோசனை பெற வழியிருக்கிறது. இதற்கு playstore-ல் இருந்து Hello BPCL என்ற APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள். அதில் காட்டும் Apollo health Card-ஐ க்ளிக் செய்தால் ₹800 மதிப்புள்ள மருத்துவ ஆலோசனை உங்களுக்கு இலவசமாக கிடைக்கும். SHARE.
Similar News
News February 10, 2026
விஜய் CM ஆவாரா? நடிகர் சிவக்குமார் பதில்

விஜய்யின் அரசியல் வருகை குறித்து திரைப்பிரபலங்கள் பெரிதாக வாய் திறப்பதில்லை. இந்நிலையில் விஜய்யின் முதல்வர் கனவு நிறைவேறுமா என்ற கேள்விக்கு நடிகர் சிவக்குமார் ஒரேவரியில் பதில் அளித்துள்ளார். விஜய் முதல்வராக வந்தே ஆகணும் என மக்கள் நினைத்தால் வந்துவிடுவார் என அவர் தெரிவித்துள்ளார். சிவக்குமாரின் கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
News February 10, 2026
திமுகவில் இணைந்தார்.. அதிமுகவுக்கு ஏமாற்றம்

கொங்கு மண்டலத்தில் திமுகவினரை இழுக்க அதிமுகவும், அதிமுகவினரை இழுக்க திமுகவும் போட்டிப் போட்டு வருகின்றன. குறிப்பாக கரூரில் இந்த விவகாரம் அனல் பறக்கிறது. கடந்த 8-ம் தேதி திமுக மாவட்ட நிர்வாகியும், Ex கவுன்சிலருமான பசுவை கி.வடிவேல் MR விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஒரே நாளில் மனம் மாறிய அவர், இன்று செந்தில் பாலாஜி முன்னிலையில் மீண்டும் திமுகவில் ஐக்கியமானது பேசுபொருளாகியுள்ளது.
News February 10, 2026
எங்கே செல்லும் ராமதாஸின் பாதை?

ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத தலைவராக இருந்த ராமதாஸின் நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. விசிகவால் திமுகவிலும், அன்புமணியால் அதிமுகவிலும் இணையமுடியாமல் இருக்கும் அவரது தரப்பு, சீமானிடமும் விஜய்யிடமும் அப்ரோச் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களோ அதனை மறுத்திருக்கின்றனராம். இதனால் ராமதாஸ் தரப்பினர் தேர்தலை எண்ணி மனஉளைச்சலில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.


