News October 18, 2024
இலவச மரக்கன்றுகளைப் பெற அழைப்பு

அச்சிறுபாக்கத்தில் உள்ள வனச்சரக அலுவலக வளாகத்தில், 20,000 மரக்கன்றுகள் கடந்த மே மாதம் நடப்பட்டன. ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்டவற்றை, அச்சிறுபாக்கத்தில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து இலவசமாக மரக்கன்றுகளைப் பெற்றுச் செல்லலாம். 1 ஏக்கர் நிலத்திற்கு, 200 மரக்கன்றுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஷேர் பண்ணுங்க
Similar News
News July 9, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று (08/07/25) இரவு ரோந்து பணி பார்க்கும் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களின் தொடர்புக்கு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள காவல் துறையினரின் நேரடி மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம். குறிப்பாக இரவு நேரம் வேலைக்கு செல்லும் பெண்கள் இத்தகைய மொபைல் எண்களை கண்டிப்பாக வைத்திருங்கள் மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் செய்யுங்கள.
News July 8, 2025
விமான நிலையத்தில் இருந்து 20 லட்சம் பேர் பயணம்

சென்னை விமான நிலையத்தில் மே மாதம் 13449 விமானங்களில் 20 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டு இருப்பதாக விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 12958 விமானங்களில் 19 லட்சத்து 38 ஆயிரம் பேர் பயணம் செய்திருப்பதாகவும், துபாய், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, டெல்லி, மும்பை, அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
News July 8, 2025
செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
வாடகை வீடு மோசடிகளில் சிக்காமல் இருக்க செங்கல்பட்டு காவல்துறை சில வழிகளை கூறியுள்ளது. வாடகை ஒப்பந்தத்தை கவனமாக மதிப்பாய்வு செய்யவும். போலியான முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி அவசரப்பட்டு ஒப்பந்தம் செய்யவோ, பணம் கொடுத்து ஏமாறவோ வேண்டாம். இதுகுறித்து புகார்கள் தெரிவிக்க அழைக்கவும் மாவட்ட காவல் அலுவலக உதவி எண் ☎️ 7200102014.