News August 5, 2024
இலவச தையல் மெஷின் வழங்கிய கரூர் கலெக்டர்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மற்றும் கூட்டு இணைப்பதிவாளர் ஆகியோர் உடன் இருந்தனர்
Similar News
News January 28, 2026
கரூர்: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க
News January 28, 2026
கரூர்: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

கரூர் மாவட்டம், தாந்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு (28.01.2026) இன்று கரூர் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக பிப்ரவரி 7, 2026 (சனிக்கிழமை) அலுவலக நாளாக நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார். SHARE IT
News January 27, 2026
கரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எதிர்வரும் 30.1.26 ஆம் தேதியன்று மாலை 4.00 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எரிவாயு நுகர்வோர்கள் மேற்படி நாளில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சித்தலைவர் தங்கவேல், இன்று தெரிவித்துள்ளார்.


