News January 9, 2025
இலவச தையல் மிஷின் வழங்க 232 பேர் தேர்வு

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு 2024 – 25ம் நிதியாண்டுக்கான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்க மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான நேர்முகத் தேர்வு நேற்று (ஜன.8) நடைபெற்றது. இதில், 237 பேர் பங்கேற்ற நிலையில் 232 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News January 30, 2026
விக்கரவண்டி அருகே அதிர்ச்சி!

விக்கிரவாண்டியை அடுத்த துறவி கிராமத்தைச் சேர்ந்த தையல் கலைஞர் வெற்றிவேல், நேற்று ராதாபுரம் வெட்டுக்காடு பகுதி திருமண மண்டபம் அருகே நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாகத் திடீரென மயங்கி விழுந்தார். விழுந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 30, 2026
விழுப்புரம்: உங்கள் What’s app பாதுகாப்பா இருக்கா? Click Now!

உங்கள் வாட்ஸ் ஆப்பில் தெரியாத, தேவை இல்லாத நம்பர்களில் இருந்து கால் வருதா..?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக யாருக்காவது உதவியாக இருக்கும்.
News January 30, 2026
விழுப்புரம் அருகே பேருந்து விபத்து!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து புறப்பட்டுச் சென்றது. மேம்பாலத்தில் சென்றபோது பிரேக் செயல்படாமல் பேருந்து வேகமாக முன்னேறியது. உடனடியாக சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர், பேருந்தை சாலையோர தடுப்பில் மோதி நிற்கச் செய்தார். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தில் உள்ள அனைத்து பயணிகளும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


