News October 24, 2024

இலவச சட்ட உதவி Toll Free தொலைபேசி எண் அறிவிப்பு

image

மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியும் சட்டப்பணிகள் ஆணை குழுவின் தலைவருமான சிவகடாட்சம் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி Toll Free தொலைபேசி எண்ணை 15100 துவக்கி வைத்தார். இதில் அனைத்து நீதிபதிகள் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சமரச தீர்வு மைய வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் ஏழை மக்களுக்கு இந்த சேவை மையம் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News February 11, 2026

மதுரை: பெற்றோர்களின் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News February 11, 2026

மதுரை: கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா..?

image

மதுரை மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.

News February 11, 2026

கோரிப்பாளையம்: அரசு பஸ் மோதியதில் ஒருவர் பலி

image

மதுரை, பனகல் சாலை அரசு ராஜாஜி மருத்துவமனை முன் கடந்த வெள்ளிக்கிழமை சாலையைக் கடக்க முயன்றபோது, அரசுப் பேருந்து மோதியது. பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார். 55 வயது மதிக்கத்தக்க இவர், வலது கால் முட்டி மற்றும் வலது முன்னங்கையில் பழைய காயத் தழும்புகளுடன், சிவப்பு நிற அரைக்கால் ஆடை அணிந்திருந்தார். இது தொடர்பாக மதுரை மாநகரப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!