News August 31, 2025

இலவச சட்ட ஆலோசனை மைய சேவைகள் (2/2)

image

சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவைகளுக்கு இலவசமாக ஆலோசனை பெறலாம். சில வழக்குகளுக்கு (சிவில் / கிரிமினல் / குடும்பம் சார்ந்த) இலவசமாக வழக்கறிஞர்களை பெறலாம். நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு இரு தரப்பினரும் சமரசம் செய்ய தயாராக இருந்தால், லோக் அடாலட் மூலம் தீர்வு காணலாம். இப்படி பல விஷயங்கள் உள்ளன. மறக்காமல் ஷேர் செய்யுங்கள்.

Similar News

News September 3, 2025

காஞ்சிபுரம்: குறைந்த விலையில் வீடு வேணுமா?

image

சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது இன்று வரை எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி இருக்கு காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடுகள் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள்<> இங்கே<<>> கிளிக் செய்து விண்ணப்பியுங்க. (SHARE பண்ணுங்க)

News September 3, 2025

கொந்தளித்த காஞ்சிபுரம் மக்கள்

image

காஞ்சிபுரம் – சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் அடிக்கடி தாமதமாவதைக் கண்டித்து, காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பாலூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக ரயில் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News September 3, 2025

காஞ்சிபுரம் வட்டாரத்தில் அதிரடி சோதனை

image

காஞ்சிபுரம், உத்திரமேலூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று RTO அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விதியை மீறி அதிக பாரம் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனங்கள், தகுதிச் சான்று புதுப்பிக்காதவை, ஓட்டுநர் உரிமம் (ம) அனுமதி சீட்டு இல்லாதவை, வரி செலுத்தாதவை, தார்பாலின் மூடாதவைகள், அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன் உள்ளிட்ட பல்வேறு 152 வாகனங்களுக்கு மொத்தம் ரூ.22,07,735 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!