News April 18, 2025
இலவச கோடை கால விளையாட்டுப் பயிற்சி

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் இலவச கோடைகால விளையாட்டுப் பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. ஏப்.24 -ஆம் தேதிக்குள் தங்களது ஆதார் அடையாள அட்டை மற்றும் 2 புகைப்படம் ஆகியவற்றை நேரில் கொண்டு பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் அலுவலரை 7401703484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.
Similar News
News August 23, 2025
இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (22.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News August 22, 2025
தி.மலை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தி.மலை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
News August 22, 2025
தி.மலை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஆக.29-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதில் 30க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 8th,10th,12th, ITI, பாலிடெக்னிக் முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 04175-233381 எண்ணில் அழைக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க