News April 18, 2025
இலவச கோடைக்கால பயிற்சி முகாம் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் வரும் 25.04.2025 முதல் 15.05.2025 வரை நடைபெற உள்ளது. தடகளம், கபடி, கூடைப்பந்து, கால்பந்து மற்றும் கை பந்து என 5 விளையாட்டிற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 7401703463 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க
Similar News
News April 19, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

போக்குவரத்து கழகத்தில் 1004 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த <
News April 19, 2025
ஓடும் ரயிலில் தவறி விழுந்து பைனான்ஸ் ஊழியர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் காரகுப்பம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 27). இவர் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்ய ஜோலார்பேட்டை – கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் ரயிலில் பயணம் செய்த போது தவறி விழுந்து சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News April 19, 2025
ஆங்கிலேயர்களுக்கு தண்ணீர் தர மறுத்த திருப்பத்தூர் மக்கள்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1772ல் முதல் மாவட்டம் சேலம் உருவாக்கப்பட்டு அதற்கு மூன்று கலெக்டர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் ஒன்று திருப்பத்தூர் கலெக்டர். இந்தப் பகுதியில் கலெக்டரை நியமித்ததும் அங்கு வந்து செல்லும் ஆங்கிலேயர் தண்ணீருக்காக பொது கிணற்றை நாடி உள்ளனர். ஆனால் தாய் மண்ணின் மீது கொண்ட பாசத்தாலும் ஆங்கிலேயர் மீது இருந்த வெறுப்பாலும் தண்ணீர், உணவு தர திருப்பத்தூர் மக்கள் மறுத்துவிட்டனர். ஷேர்