News April 23, 2025

இலவச கோடைகால வாலிபால் பயிற்சி

image

நெல்கலை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சார்பில், 41ஆவது ஆண்டுக்கான கோடைக்கால வாலிபால் பயிற்சி முகாம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்குகிறது. இந்த முகாமானது, எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் காலை 6.30 மணிக்கு நடைபெறும். இதில், 12 – 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். முன்பதிவு தேவையில்லை. பயிற்சி நாளன்று தங்கள் பெயரை பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு 93822 07524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Similar News

News August 23, 2025

சென்னையில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

சென்னை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News August 23, 2025

சென்னை: 10ஆம் வகுப்பு போதும்! அட்டகாசமான அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை கீழ் இயங்கும் அச்சு மையங்களில் காலியாக உள்ள Junior Electrician, Assistant Offset Machine Technician, Junior Mechanic உள்ளிட்ட 56 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு ஏற்ப ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் உள்ள <>படிவத்தை <<>>பூர்த்தி செய்து செப்.19குள் அதில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

News August 23, 2025

உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு 20 லட்சம் நிதியுதவி

image

சென்னை, கண்ணகி நகர், ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் மின்சாரம் தாக்கி துப்புரவுப் பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார். இதனை கண்டித்து துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!