News March 16, 2026
இலவச கேஸ்.. மக்களை ஈர்க்க PNG நிறுவனங்களின் ஆஃபர்

LPG சிலிண்டருக்கான தட்டுப்பாட்டு அதிகரித்து வருவதால் PNG இணைப்புகளுக்கு மக்களை ஈர்க்க எரிவாயு விநியோக நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளன. பதிவுக் கட்டண விலக்கு முதல் ₹500-க்கான இலவச எரிவாயு வரை பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மார்ச் 31-ம் தேதிக்குள் புது இணைப்பு பெறுபவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என GAIL மற்றும் Indraprastha Gas நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
Similar News
News April 5, 2026
கணவரின் நண்பருடன் மனைவி.. தகாத உறவு கொடூரம்!

வேலூர், ஒடுகத்தூரில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதல் கணவனை தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த மனைவி போலீசில் சிக்கியுள்ளார். பெங்களூருவில் மேஸ்திரி வேலை செய்து வந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது நண்பர் அன்பழகனை மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். நாளடைவில் தகாத உறவாக மாறவே மோனிஷாவும், அன்பழகனும் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். So Sad!
News April 5, 2026
ஏர் இந்தியா விமான விபத்து: PM-க்கு குடும்பத்தினர் கடிதம்

இந்தியாவையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் பலியானதன் காரணம் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில், விமானத்தின் கருப்பு பெட்டி & காக்பிட் பதிவு தரவுகளை வெளியிடுமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் PM மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த தரவுகள் வெளியே வந்தால், விபத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பது துல்லியமாக தெரியும். இச்சம்பவம் நடந்து 10 மாதங்களை கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
News April 5, 2026
பனையூர் வாசல்ல தான் நிக்கனும்: அன்புமணி

பெரம்பூர் தொகுதியின் பாமக வேட்பாளர் திலகபாமா ஒரு போராளி என்று அன்புமணி கூறியுள்ளார். அங்கு நடைபெற்ற பரப்புரையில் பேசிய அவர், தினந்தோறும் களப்பணியாற்றி மக்களுடன் மக்களாக இயங்குபவர் அவர் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், எளிதில் அணுக முடியாத ஒருவருக்கு வாக்களித்தால் நீங்கள் பனையூர் கேட் வாசலில்தான் நிற்க வேண்டும் என விஜய்யை அன்புமணி விமர்சித்துள்ளார்.


