News May 7, 2025

இலவச கலைப்பயிற்சி தொடக்கம்

image

பொள்ளாச்சியில் உள்ள ஜவகர் சிறுவர் மன்றங்களில் கோடைக்கால இலவச கலைப்பயிற்சி மே.1ஆம் தேதி முதல் நடக்கிறது. இதில் 5 வயது முதல் 16 வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு நடனம், இசை, ஓவியம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். விருப்பமுள்ள மாணவர்கள் 97515- 28188 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலைப் பண்பாட்டு மைய இயக்குனர் நீலமேகன் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 18, 2025

கோவை: டிகிரி போதும்.. LIC-யில் வேலை!

image

கோவை மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 08.09.2025 ஆகும். SHARE IT!

News August 18, 2025

கோவையில் பலே மோசடி: போலீசார் எச்சரிக்கை!

image

கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாக ஒரு கும்பல், மாணவர்களின் செல்போனுக்கு QR CODE அனுப்பி ஸ்கேன் செய்ய அறிவுறுத்துகின்றனர். அதை ஸ்கேன் செய்தால் வங்கி கணக்கிலிருந்து மொத்த பணமும் மோசடி செய்யப்படும். எனவே மாணவர்களும், பெற்றோர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆன்லைன் மோசடி புகார்களுக்கு 1930 தொடர்பு கொள்ளலாம். SHARE IT

News August 18, 2025

மேட்டுப்பாளையம்: விரக்தியில் கணவன் தற்கொலை

image

சிறுமுகை கென்னடி வீதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் மனைவியை விட்டு பிரிந்து ஓராண்டாக வசித்து வரும் நிலையில், 4 மாதங்களுக்கு முன் சட்டப்படி விவாகரத்து பெற்றுள்ளனர். இதனிடையே மனைவிக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமானதை அறிந்து விரக்தியடைந்த செல்வக்குமார், நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!