News April 10, 2025
இலவச எலும்பு பரிசோதனை முகாம்

வேதா பிசியோதெரபி கிளினிக் சார்பில் வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி அன்று இலவச பிசியோதெரபி மற்றும் எலும்பு பரிசோதனை முகாம் தர்மபுரியில் உள்ள அம்மா கண்ணு மருத்துவமனை அருகில் நடைபெறுகிறது. இந்த முகாமில் மூட்டின் செயல்பாட்டினை கண்டறிதல் மற்றும் மூட்டுவலி, இடுப்பு வலி, கழுத்து வலி ஆகியவைக்கான பரிசோதனை அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மூலம் செய்யப்படுகிறது.
Similar News
News April 18, 2025
பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வரும் ஏப்ரல் 25 அன்று காலை 09:00 மணிக்கு தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 2023, 2024, 2025 ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு டிப்ளமோ,பட்டப்படிப்பு படிப்பை முடித்த மாணவிகளுக்கு மட்டும் பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது.
News April 17, 2025
தர்மபுரியில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக கோடைகால பயிற்சி முகாம் 25.04.2025 முதல் 15.05.2025 வரை நடைபெற உள்ளது. இதில் தடகளம், வாலிபால், டேக்வாண்டோ, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்கேட்டிங் ஆகிய விளையாட்டுக்களில் பயிற்சி நடைபெறவுள்ளது. கோடைகால பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
News April 17, 2025
குத்தகைதாரர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்தில் சிறுகனிம குத்தகைகளுக்கான நடைச்சீட்டுகளை வருகின்ற 21.04.2025 முதல் இணையவழியில் குத்தகைதாரர்கள் தாங்களாகவே எடுத்துக்கொள்ளலாம். மேலும் நடைச்சீட்டுகளை அச்சடிக்கத் தேவையானப் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஏ4 தாள்கள் புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரக அலுவலகத்தில் இருந்து அஞ்சல் மூலமாக குத்தகைதாரர்களின் முகவரிக்கு அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.