News April 25, 2024

இலவச அழகுக் கலைப் பயிற்சி

image

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வருகின்ற 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பெண்களுக்கு இலவச அழகுக் கலைப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோா் தங்களது ஆதாா் அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9500314193 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குநா் அறிவித்துள்ளார்.

Similar News

News November 5, 2025

வகுப்பறை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

image

தேனி மாவட்டம், மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.11.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News November 4, 2025

சின்னமனூரில் மின்தடை ரத்து

image

நாளை (05.11.2025) பராமரிப்பு பணி காரணமாக 110 KV மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையங்களில் உள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால், மேற்கண்ட பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் இருக்கும் என மின்செயற்பொறியாளர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 4, 2025

தேனி: Gpay, Phonepe, paytm பயன்படுத்துகிறீர்களா?

image

தேனி மக்களே Gpay, Phonepe, paytm தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

error: Content is protected !!