News October 24, 2024
இலவச அரிசிக்கான பணம் நாளை வங்கியில் வரவு வைப்பு

புதுச்சேரி அரசு, குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.1,200, மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.600 அவர்களது வங்கிக் கணக்கில் நாளை வரவு வைக்கப்பட உள்ளது என அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 25, 2026
புதுச்சேரி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

புதுச்சேரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!
News January 25, 2026
புதுச்சேரி: மது போதையில் ரகளை செய்த 3 பேர் கைது

திருபுவனை போலீசார் திருவண்டார்கோயில் – கொத்தபுரிநத்தம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கே குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் நெய்வேலியைச் சேர்ந்த தர்மராஜ் (22), ராணிப்பேட்டையைச் சேர்ந்த சூர்யா (24), ஆற்காடைச் சேர்ந்த நவீன் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் திருபுவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News January 25, 2026
புதுச்சேரி: மழை எச்சரிக்கை!

புதுச்சேரி மாற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுவதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!


