News June 13, 2024

இலங்கை மீனவர் படகு மீட்பு

image

வேதாரண்யம் அருகே இலங்கையைச் சேர்ந்த படகு நேற்று (ஜூன்.12) இயந்திரம் பழுது காரணமாக படகுடன் கடலில் மிதந்து கொண்டிருந்த மீனவர்கள் மட்டும், மீன்பிடித்து திரும்பிக்கொண்டிருந்த
ஆறுகாட்டுத்துறை படகால் இரு மீனவர்கள் மீட்கப்பட்டனர். இன்ற(ஜூன்.13)கடலில் மிதந்துக் கொண்டிருந்த படகினையும் மீன்பிடித்து திரும்பிக்கொண்டிருந்த ஆறுகாட்டுத்துறை மீனவர்களால் படகானது மீட்கப்பட்டு   துறைமுகத்தில் நிறுத்தபட்டது

Similar News

News September 27, 2025

நாகை மாவட்ட மாணவன் சாதனை!

image

நாகையை சேர்ந்த பானு குமார், தமிழ்ச்செல்வி ஆகியோரது மகன் இன்பன் (12). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் பங்கேற்றார். சுமார் 10 நாடுகளில் இருந்து 166 பேர் பங்கேற்ற போட்டியில் நாகையை சேர்ந்த இன்பன் 8-வது இடம் பிடித்து அசத்தினார். இந்நிலையில் சர்வதேச அளவில் சாதனை படைத்த இன்பனை, நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் நேரில் அழைத்து பாராட்டினார்.

News September 27, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (செப்.26) இரவு 10 மணி முதல் இன்று(செப்.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலர்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 26, 2025

நாகையில் பழந்தமிழர் பாரம்பரிய கருவிகளின் இசை நிகழ்ச்சி

image

நாகை மாவட்டம் நிர்வாகத்துடன் நாகை தனியார் ஷாப்பிங் மால் இணைந்து வழங்கும் பழந்தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளின் இசை நிகழ்ச்சி வருகிற செப்.28ம் தேதி நாகை புதிய கடற்கரையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வு, பாரம்பரிய கலைக்களம் கலைக்குழுவின் நிறுவனர் சவுண்ட் மணி தலைமையில் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பாரம்பரிய இசை நிகழ்ச்சியை கண்டு களிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

error: Content is protected !!