News May 16, 2024
இலங்கை மீனவர்கள் 14 பேர் ஐந்து படகுடன் கைது

இந்திய கடல் எல்லை பரப்பில் மீன்பிடித்த இலங்கை பருத்தித் துறை பகுதியைச் சேர்ந்த 14 மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையினரால் இன்று கைது செய்யப்பட்டனர். வேதாரண்யம் அருகே இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி துர்காவதி என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது இந்திய எல்லைக்குள்
ஐந்து படகு மூலம் கடல் அட்டைகளைப் பிடித்த இலங்கை மீனவர்களை கண்டு அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தது.
Similar News
News October 29, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (அக்.28) இரவு 10 மணி முதல் இன்று(அக்.29) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News October 28, 2025
83,531 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்; ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கே.எம்.எஸ் 2025-2026 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் 03.09.2025 முதல் 27.10.2025 வரை 83,531 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், நேற்று ஒரே நாளில் 2,996 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News October 28, 2025
நாகை: 16,915 விவசாயிகளிடம் நெல் கொள்முதல்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 16,915 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை ரூபாய் 197.78 கோடித் தொகை அவர்தம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் நடைபெறும் கொள்முதல் பணிகள் தங்கு தடை இன்றி விரைவாக நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


