News September 14, 2024
இலங்கையில் இருந்து தமிழகம் வந்த 19 மீனவர்கள்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 19 மீனவர்கள், நேற்றிரவு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். நாகை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 19 மீனவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி விசைப்படகுகளில், கடலில் மீன் பிடித்த போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 7, 2025
செங்கல்பட்டு: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 7, 2025
செங்கை: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.
News November 7, 2025
செங்கல்பட்டு: கார் மோதி விபத்து!

செங்கல்பட்டு, மாமண்டூர் பகுதியில், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி நேற்று காரினை இளைஞர் ஒருவர் ஓட்டி சென்றார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே உள்ள சுவற்றில் மோதியது. இதில் காரின் முன் பகுதி முழுவதும் சேதமானது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


