News January 29, 2026
இலங்கைக்கு கடத்த இருந்த 110 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மரைன் போலீசாருக்கு ரகசிய தகவலின் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடற்கரை பகுதியில் சோதனை நடத்திய போது பதுக்கி வைத்திருந்த 110 கிலோ கடல் அட்டைகள் மற்றும் 30 கிலோ கடல் குதிரைகளை போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 10, 2026
முதுகுளத்தூர் வீரர் உலக கோப்பை போட்டிக்கு தேர்வு

முதுகுளத்தூரை சேர்ந்த இந்திய லங்காடி அணி தலைவர் தேவசித்தம் உலக கோப்பை போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருடன் மகாராஷ்டிரா, கார்நாடக, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 12 வீரர்கள் பூடான் நாட்டில் அக்டோபரில் நடைபெற உள்ள உலக கோப்பை லங்காடி விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர். மேலும் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் உலக கோப்பை நடத்த ஆசிய லங்காடி கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
News February 10, 2026
ராமநாதபுரம்: உங்க வீட்ல குழந்தைகள் இருக்கா?

ராமநாதபுரம் மக்களே, உங்கள் வீட்டில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் இருந்தால், பால் ஆதார் எடுக்க வேண்டும். கல்வி, பிற தேவையின் போது ஆதார் அவசியமாகும். இதற்காக நீங்க அலைச்சல் இல்லாமல் வாங்க எளியவழி உள்ளது. இங்கு <
News February 10, 2026
ராமநாதபுரம்: ஊர்க்காவல் படையில் வேலை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊர்க்காவல் படை & மீனவ இளைஞர் கடலோர பாதுகாப்பு படைக்கு ஆட்கள் தேர்வு. ஊர்க்காவல் படையில் (2 பெண்கள்) 52 பேரும், கடலோர பாதுகாப்பு படையில் 40 இளைஞர்களும் தேர்வு செய்யப்படுவர். 18-50 வயது – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் 14ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். (பிப்.18 – தேர்வு) SHARE


