News April 7, 2025
இறைச்சி சாப்பிட்ட சிறுமி மூச்சுத்திணறி உயிரிழப்பு

ஈரோடு, பவானியைச் சேர்ந்த முனீஸ் என்பவரது மகள் வர்ஷினி (13). இவருக்கு நேற்று இறைச்சி சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து சிறுமியின் உடலை உடற்கூறாய்வு செய்ய பவானி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காலதாமதம் ஏற்பட்டதால், உறவினர்கள் அந்தியூர் பவானி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News October 29, 2025
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News October 28, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் அதிகளவில் பாரங்களை ஏற்றி செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பாரங்கள் ஏற்றுவது வாகனங்களுக்கு சேதம் மற்றும் உயிரிழப்பு ஏற்படும் நிலையை உருவாக்குகிறது. எனவே எடை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட போலீசார் வாகன ஓட்டுநர்களை அறிவுறுத்தியுள்ளனர்.
News October 28, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கும் நோக்கில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. “இன்றைய குழந்தைகளே நாளைய எதிர்காலம்” என்ற கோஷத்துடன், குழந்தைகள் கல்வியில் சிறந்து வளர வேண்டியதையும், தொழிலுக்கு ஈடுபடக் கூடாதெனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகமான சிறுவர் தொழிலாளர் சம்பவங்களை 1098 என்ற குழந்தைகள் உதவி எண் மூலம் தெரிவிக்கலாம்.


