News January 3, 2026
இறுதி ஆண்டு படிக்கும் போதே ₹2.5 கோடி சம்பளம்!

IIT ஹைதராபாத்தில் கம்பியூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர் எட்வர்ட் நாதன் வர்கீஸ், இறுதி ஆண்டு படிக்கும் போதே ஆண்டுக்கு ₹2.5 கோடி சம்பளத்தில் வேலையை உறுதி செய்துள்ளார். இதன்மூலம் IIT ஹைதராபாத்தில் படித்து அதிக சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த மாணவர் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார். நெதர்லாந்தில் உள்ள சர்வதேச டிரேடிங் நிறுவனமான ‘Optiver’ இந்த ஆஃபரை வழங்கியுள்ளது. வரும் ஜூலையில் அவர் பணியில் சேர உள்ளார்.
Similar News
News January 7, 2026
பிரபல தமிழ் நடிகருக்கு திருமணம்

பிரபல இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான். இவர் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, முதல் படத்திலேயே கவனம் பெற்றார். இந்நிலையில், இவருக்கும் டாக்டர் பிரீத்தா என்பவருக்கும் ஜன.28-ல் திருப்பதியில் திருமணம் நடைபெறவுள்ளது. இதனையடுத்து பிப்.1-ல் சென்னையில் வரவேற்பு நடைபெறவுள்ளது. தற்போது பிரபலங்களுக்கு தங்கர் பச்சான் அழைப்பிதழை வழங்கி வருகிறார். நாமும் வாழ்த்தலாமே!
News January 7, 2026
விஜய் எனக்கு எதிரி இல்லை: சீமான்

விஜய்யை எதிர்ப்பதற்காக தான் கட்சி ஆரம்பிக்கவில்லை என சீமான் கூறியுள்ளார். விஜய்யுடன் தனக்கு போட்டியில்லை என்ற அவர், தன்னை எதிர்ப்பவர்கள் எல்லாம் தனக்கு எதிரி இல்லை என்றும், தான் எதிர்ப்பவர்களே தனக்கு எதிரி எனவும் பேசியுள்ளார். அந்தவகையில் இந்திய கட்சிகள், திராவிட கட்சிகள் தான் தனக்கு எதிரி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 7, 2026
எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அன்பில் மகேஸ்

TN மாணவர்களுக்கு என்ன தேவை என்பது TN அரசுக்கு தான் தெரியும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் TN-ல் தான் மாநில கல்விக் கொள்கை (TNSEP) உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். டெல்லியில் இருந்துகொண்டு உத்தரவு போட்டால், எப்படி நம் பிள்ளைகள் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதற்காகவே TNSEP என்றும் அவர் குறிப்பிட்டார்.


