News December 2, 2024

இறப்பு தேதியை அறிய ஆவலா… வந்துவிட்டது Death Clock

image

மனிதர்களின் இறுதி நாளை கண்டறியும் Death Clock என்ற AI செயலி கவனம் ஈர்த்துள்ளது. சுமார் 5.3 கோடி பங்கேற்பாளர்களின் உதவியுடன் 1,200க்கும் மேற்பட்ட ஆயுட்கால ஆய்வு தரவுகளின் அடிப்படையில் இந்த AI செயலி உருவாக்கப்பட்டுள்ளது. உணவு பழக்கம், உடற்பயிற்சி, மன அழுத்தம், தூக்கம் பற்றிய தகவல்களைப் பயன்படுத்தி, நமது ஆயுட்காலத்தை இந்த செயலி துல்லியமாக கணக்கிடுவதாகக் கூறப்படுகிறது.

Similar News

News September 10, 2025

அணி மாறி வாக்களித்த INDIA கூட்டணி MP-கள்

image

துணை ஜனாதிபதி தேர்தலில் INDIA கூட்டணியின் 15 எம்.பி.க்கள் NDA வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்துள்ளனர். தேர்தலில் INDIA கூட்டணியின் 315 எம்.பி.க்கள் வாக்களித்ததாக காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவில் சுதர்சன் ரெட்டிக்கு 300 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன. எனவே, INDIA கூட்டணியின் 15 எம்.பி.க்கள் எதிரணி வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்தது உறுதியாகியுள்ளது.

News September 10, 2025

சிபி ராதாகிருஷ்ணனுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து

image

துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள சிபி ராதாகிருஷ்ணனுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு மற்றும் நாட்டின் ஜனநாயக கொள்கைகளுக்கான தனது கடமைகளை சிபி ராதாகிருஷ்ணன் உறுதியுடன் நிறைவேற்றுவார் என நம்புவதாக X தள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே போல EPS உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

News September 10, 2025

இவங்களும் செல்லாத ஓட்டு போடுறாங்களாம்..!

image

படிக்காத பாமர மக்கள்தான் விவரம் தெரியாம செல்லாத ஓட்டு போடுறாங்கன்னு பார்த்தா, துணை ஜனாதிபதி எலெக்‌ஷன் வரை இந்த பிரச்னை இருக்கும் போலயே. இன்னைக்கு நடந்த எலெக்‌ஷன்ல, 767 பேர் மொத்தமா ஓட்டு போட்ருக்காங்க. அதுல சிபி ராதாகிருஷ்ணன் 452 ஓட்டு வாங்கிருக்காரு. சுதர்சன் ரெட்டி 300 ஓட்டு வாங்கிருக்காரு. மீதி இருக்கிற 15 செல்லாத ஓட்டாம். மாதிரி எலெக்‌ஷன்லாம் நடத்துறாங்க. அப்பவும் இப்படி நடந்தா எப்படி?

error: Content is protected !!