News November 19, 2024
இறந்த பாகனை எழுப்ப முயன்ற தெய்வானை!

திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானையை பாகனின் உறவினர் சிசுபாலன், நீண்டநேரம் தொட்டபடி செல்ஃபி எடுத்துள்ளார். புதிய நபர் தன்னை தொடுவதை விரும்பாத தெய்வானை, அவரை தாக்கியுள்ளது. அதை தடுக்க வந்த பாகனையும் தாக்கி இருக்கிறது. பின்னர், பாகனை தாக்கி விட்டோமே என்ற வேதனையில் அவரை எழுப்ப முயன்றுள்ளது. ஆனால் அவர் எழுந்திருக்காததால் கோபத்தில் மீண்டும் சிசுபாலனை தாக்கியதாக யானை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 29, 2025
பேய் படத்தில் ராஷ்மிகா மந்தனா

தமிழில் எத்தனை பேய் படங்கள் வந்தாலும் காஞ்சனாவுக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஏற்கெனவே 3 பாகங்கள் வெளியான நிலையில் தற்போது ‘காஞ்சனா – 4’ படத்தை ராகவா லாரன்ஸ் எடுத்து வருகிறார். இதில் பூஜா ஹெக்டே, நோரா படேஹி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். இதில் ராஷ்மிகா மந்தனாவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளாஷ் பேக்கில் ராஷ்மிகா வருகிறாராம். அப்போ பேய்யா இருப்பாரோ?
News August 29, 2025
வெள்ளிக்கிழமையில் அம்பாள் அருள் கிடைக்க…

அம்பாளுக்கு உகந்த நாளான இன்று,
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை,
அண்டம் எல்லாம் பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை,
புவி அடங்கக் காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கரும்புவில்லும் சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.
என்ற மந்திரத்தை சொல்லி வழிபடுங்கள். SHARE IT.
News August 29, 2025
EPS பரப்புரைக்கு வரவேற்பு.. புதிய வியூகங்களுடன் DMK

10,000 KM, 100 தொகுதிகள் என EPS தனது 3 கட்ட பரப்புரையை முடித்துள்ளார். மக்களின் கூட்டம், அரசுக்கு எதிரான EPS-ன் பேச்சுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக அதிமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர். ADMK அணிகள் பிளவு நமக்கு சாதகமாகும் என நினைத்திருந்த திமுகவுக்கு, EPS-க்கு கூட்டம் கூடியது சற்று அதிர்ச்சியை தந்துள்ளதாம். இதனால், விரைவில் புதிய வியூகங்களுடன் களமிறங்க கட்சியினருக்கு DMK தலைமை உத்தரவிட்டுள்ளதாம்.