News February 14, 2026

இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்தார்.. ஆச்சரியம்

image

இறந்தவர் மீண்டும் திரும்பி வந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு சம்பவம் அசாமில் நடந்துள்ளது. மேகாலயா சுரங்க விபத்தில் தொழிலாளி ஷியாம் பாபு உயிரிழந்ததாகக் கருதி, ஒரு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் உடலை தகனம் செய்தனர். இந்நிலையில், 3 நாள்களுக்கு பிறகு ஷியாம் பாபு உயிருடன் வீடு திரும்பி குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்போ, தகனம் செய்த உடல் யாருடையது?

Similar News

News February 19, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹2,160 உயர்ந்தது!

image

கடந்த 3 நாள்களாக தொடர் சரிவில் இருந்த தங்கம் இன்று(பிப்.19) தாறுமாறாக உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹270 அதிகரித்து ₹14,500-க்கும், சவரனுக்கு ₹2,160 உயர்ந்து ₹1,16,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தில் இருப்பதால் இந்திய சந்தையில் கடும் விலை உயர்வை கண்டுள்ளது.

News February 19, 2026

தொகுதியை மாற்றுகிறாரா உதயநிதி?

image

வரும் தேர்தலில் திருவாரூரில் போட்டியிட உதயநிதி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு சென்னை தொகுதிகளில் திமுகவுக்கு பின்னடைவு என கணிப்புகள் வருவதே காரணம் என்கின்றனர். திமுகவின் கோட்டையான திருவாரூரில் தான் 2011, 2016-ல் கருணாநிதி கூட வென்றிருந்தார். எனவே, அங்கு சிட்டிங் MLA-ஆன பூண்டி கலைவாணன் தான் இம்முறையும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், களம் இப்படி மாறியிருப்பதாக பேசப்படுகிறது.

News February 19, 2026

மகளிர் உரிமைத்தொகை புதிய விண்ணப்பம்.. அரசின் தகவல்

image

மகளிர் உரிமைத்தொகையை ₹2,000 ஆக உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்த பிறகு பலரும் புதிதாக விண்ணப்பிக்க இ-சேவை, தாசில்தார் ஆபிஸ், கலெக்டர் ஆபிஸ்களில் குவிகின்றனர். தற்போது புதிதாக விண்ணப்பங்கள் ஏதும் பெறப்படவில்லை; ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மேல்முறையீடு மனுக்கள் மட்டுமே ஆய்வு செய்யப்படுவதாக அதிகாரிகள் பதில் கூறி திருப்பி அனுப்புகின்றனர். அதனால், பெண்கள் தேவையின்றி அலைச்சலில் ஈடுபட வேண்டாம். SHARE IT.

error: Content is protected !!