News October 25, 2024

இறந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்

image

எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்த புதுச்சேரி அரியாங்குப்பம் சண்முகா நகரை சேர்ந்த வீரமணிகண்டன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சரவணன்குமார், அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரன் என்கின்ற தட்சணாமூர்த்தி, உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Similar News

News October 21, 2025

புதுச்சேரி: கொட்டும் மழையில் முதல்வர் அஞ்சலி

image

புதுச்சேரி கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் கொட்டும் கன மழையில், இன்று நடைபெற்ற காவலர் நினைவு தின நிகழ்ச்சியில், கலந்துகொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மழையில் நனைந்தபடி பணியின்போது உயர் நீத்த காவலர்களுக்கு, மலர் வளையம் வைத்து 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினார்கள்.

News October 21, 2025

காரைக்கால்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

image

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்பும்படியும் காரைக்கால் மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 21, 2025

புதுச்சேரி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் முதலீடு செய்தால், பல மடங்கு லாபம் கிடைக்கும் என வரும் செய்திகளை நம்ப வேண்டாம். தானாக சென்று மாட்டிக்கொண்டு பணத்தை இழக்க வேண்டாம். இதுபோன்று சமூக வலைதளங்களில் பல போலி விளம்பரங்கள் உலா வருகின்றது. செயலிகளை முற்றிலும் நம்ப வேண்டாம் என தெறிவிக்கப்பட்டது

error: Content is protected !!