News November 7, 2025

இறந்தவர் உயிருடன் வந்த அதிசயம்

image

இறந்துவிட்டதாக ஈமச் சடங்குகள் செய்யப்பட்டவர், உயிருடன் வந்தால் எப்படி இருக்கும்? சத்தீஸ்கரில் அதுதான் நடந்திருக்கிறது. மகன் புருஷோத்தமனை காணவில்லை என பெற்றோர் புகாரளித்துள்ளனர். அப்போது, போலீஸுக்கு கிணற்றில் ஒரு சடலம் கிடைத்தது. அதனை தனது மகன் என நினைத்து புருஷோத்தமனின் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். திடீர் ட்விஸ்டாக உறவினர் வீட்டிலிருந்த புருஷோத்தமன் வீடு திரும்பியுள்ளார். இதை என்ன சொல்வது?

Similar News

News November 7, 2025

FULL MOON-ல் எத்தனை வகை இருக்குனு தெரியுமா?

image

நிலவு என்றாலே அழகு தான். அதிலும் பெளர்ணமி அன்று வானில் தோன்றும் முழு நிலவின் அழகை ரசிப்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. இப்படி வரும் சில முழு நிலவுகளை நாம் சூப்பர் மூன், பிளட் மூன் என்றெல்லாம் அழைப்போம். அப்படி எத்தனை வகை முழு நிலவுகள் உள்ளன, அதன் பெயர் என்ன, காரணம் என்ன என்பது பற்றி அறிய மேலே SWIPE பண்ணுங்க…

News November 7, 2025

ஓவியம் பாடும் காவியம் ருக்மிணி வசந்த்

image

காந்தாரா: சாப்டர் 1-ல் மெய்சிலிர்க்க வைத்த ருக்மிணி வசந்த், அதன்பிறகு தொடர்ச்சியாக சேலையில் இருக்கும் போட்டோக்களை அதிகளவில் பகிர்ந்து வருகிறார். படத்தில், இளவரசி கனகவதியாக வாழ்ந்த ருக்மிணி, சேலையில் பிரம்மன் தீட்டிய ஓவியமாக இருக்கிறார். தற்போது, இவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள போட்டோக்களில், அவரது கண்கள் காவியம் பேசுகின்றன. உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

News November 7, 2025

பழைய ₹500, ₹1,000 நோட்டுகள் செல்லுமா?.. முக்கிய அறிவிப்பு

image

பழைய ₹500, ₹1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என RBI அறிவித்துள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் (PIB FACTCHECK), அந்த செய்தி வெறும் வதந்தி எனத் தெரிவித்துள்ளது. RBI-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (rbi.org.in) வெளியாகும் தகவல் மட்டுமே உண்மையானது என்றும் விளக்கம் அளித்துள்ளது. அதனால், உஷாராக இருங்கள் மக்களே!

error: Content is protected !!