News October 5, 2024
இறந்தவரும் தந்தை ஆகலாம்.. ஐகோர்ட் நெகிழ்ச்சி உத்தரவு

புற்றுநோய் பாதித்த இளைஞரின் உயிரணுவை டெல்லி கங்காராம் ஹாஸ்பிட்டலில் அவரது பெற்றோர் பாதுகாத்து வந்தனர். அவர் இறந்த நிலையில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற, மகனின் உயிரணுவை அவர்கள் கேட்டனர். ஆனால், மருத்துவமனை மறுக்கவே, இந்த விவகாரம் டெல்லி ஐகோர்ட்டுக்கு சென்றது. விசாரணையில், உயிரிழந்தவர்களின் உயிரணு மூலம் செயற்கை கருத்தரிப்பு செய்ய தடையில்லை எனக் கூறிய நீதிபதி, உயிரணுவை ஒப்படைக்க உத்தரவிட்டார்.
Similar News
News August 28, 2025
குழந்தைகள் கூட மோடியை பற்றி சொல்கின்றனர்: ராகுல்

BJP, RSS இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டு எப்படி வெற்றி பெற்றன என்பதை விரைவில் நிரூபிப்போம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாக்கு திருட்டை கண்டித்து பிஹாரில் இன்று நடைபெற்ற யாத்திரையில் பேசிய அவர், PM மோடி வாக்குகளை திருடுகிறார் என சிறு குழந்தைகள் தன் காதில் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். லோக் சபா, ஹரியானா தேர்தல்களில் நடைபெற்ற வாக்கு திருட்டின் ஆதாரத்தை கொடுக்கவுள்ளதாகவும் கூறினார்.
News August 28, 2025
நடிகர் அஜித் எடுக்கப்போகும் புது அவதாரம்?

FANBOY அடைமொழியோடு தங்களது புகழ்பாடிகளையே பெரும்பாலான ஹீரோஸ் டைரக்டர்களாக நியமித்து வருகின்றனர். GBU படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், தன்னுடைய அடுத்த பட டைரக்டர் ஆதிக் தான் என அஜித் உறுதியாக இருக்கிறாராம். ஆனால், இந்த கூட்டணிக்கு தயாரிப்பாளர்தான் கிடைக்கவில்லை. நான்கைந்து கம்பெனிகள் இந்த கூட்டணியை நிராகரித்துவிட்டதால், Production House ஆரம்பிக்க அஜித் யோசிப்பதாக கூறப்படுகிறது.
News August 28, 2025
லோன் .. வெளியானது ஹேப்பி நியூஸ்

தெருவோர கடைக்காரர்களுக்கான PM Svanidhi கடன் திட்டத்தில் வழங்கப்படும் தவணைக் கடன் ₹5,000 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வரும் 2030-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல் தவணை கடன் வரம்பு ₹15,000-ஆகவும், 2-ம் தவணை ₹25,000-ஆகவும், 3-ம் தவணை ₹50,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. உரிய காலத்தில் தவணையை செலுத்தினால் சில சலுகைகளும் அளிக்கப்படுகிறது.