News March 19, 2026
இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.92 லட்சம் இழப்பீடு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியராக பணிபுரிந்தவர் பாபு. இவர் கடந்த 2018 ம் ஆண்டு தில்லைநாயகபுரம் பகுதியில் ஆட்டோவில் செல்லும்போது பள்ளி பேருந்து மோதி உயிரிழந்தார். இந்நிலையில், அவருடைய மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் நஷ்ட ஈடு கேட்டு, கடலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் வட்டி, செலவு தொகையுடன் சேர்த்து ரூ.92,07,954 வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News April 6, 2026
கடலூர்: பள்ளி மாணவி கர்ப்பம்

நெல்லிக்குப்பம் அடுத்த தோட்டப்பட்டை சேர்ந்தவர் பிரவீன்(20). இவர் 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியை காதலித்தார். மேலும் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி சென்று தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார், பிரவீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
News April 6, 2026
கடலூர்: நேருக்கு நேர் மோதி விபத்து – தொழிலாளி பலி

பெண்ணாடம் அடுத்த கொத்தட்டையை சேர்ந்தவர் தொழிலாளி நேர்மராஜ்(42). இவர் நேற்று இரவு வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பைக்கில் இறையூர் நோக்கி புறப்பட்டார். அப்போது எதிரே வந்த பைக் மோதியதில் படுகாயம் அடைந்த நேர்மராஜ், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News April 5, 2026
கடலூர்: உங்க Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

கடலூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <


