News September 9, 2024
இறச்சக்குளம் வெடி விபத்தில் இரண்டு பேருக்கு தொடர்பு

இறச்சகுளம் அருகே காட்டுப்பன்றிக்கு வெடி வைப்பதற்காக சென்ற ராபின்சன் என்பவர் வெடி விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்த போலீசார் விசாரணையில், வெடி பொருளை ராபின்சனிடம் கொண்டு கொடுத்தது மற்றும் ராபின்சனை வெடி வைப்பதற்கு அழைத்தது என இரண்டு நபர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, அஜித் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News August 19, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட.19) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.54 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.50 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.82 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.92 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 858 கன அடி, பெருஞ்சாணிக்கு 392 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.
News August 19, 2025
குமரி: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

கன்னியாகுமரி இளைஞர்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News August 19, 2025
காணாமல் போன தொழிலாளி மலையில் எலும்புக்கூடாக மீட்பு

தோப்பூரை சேர்ந்தவர் தொழிலாளி ராஜலிங்கம் (38). இவர் 2 மாதத்திற்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் அவரை காணவில்லை. இது தொடர்பாக, ஆரல்வாய் மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், கடந்த 17ம் தேதி ஆரல்வாய்மொழி மலை உச்சியில் எலும்பு கூடாக கிடந்துள்ளனர். ராஜலிங்கத்தின் இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.