News January 5, 2026

இரும்பு கை மாயாவியாகும் அல்லு அர்ஜுன்

image

லோகேஷ் கனகராஜின் கனவான ‘இரும்பு கை மாயாவி’ படத்தில் நடிக்க சூர்யா முதல் ஆமிர் கான் வரை பலரும் போட்டி போட்டனர். ஆனால், ‘கூலி’ படத்தின் ரிசல்ட் அனைத்தையும் மாற்றிவிட்டது. தற்போது, அந்த கதையின் மீது நம்பிக்கை வைத்து அல்லு அர்ஜுன் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம். படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டின் 2-ம் பாதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மீண்டும் PAN இந்தியன் ஹிட் கொடுப்பாரா லோகி?

Similar News

News February 7, 2026

நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது.. அடுத்தடுத்து அதிர்ச்சி

image

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக சென்னையில் சினிமா பிரபலங்களுக்கு பல கோடி ரூபாய்க்கு அவர் போதைப்பொருள் விற்றது தெரியவந்துள்ளது. சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் அஞ்சுவுக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்த போலீஸ், அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளது.

News February 7, 2026

TOSS: இந்திய அணி பேட்டிங்

image

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் கத்துக்குட்டி அணியான USA-ஐ இந்திய அணி எளிதாக வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் அபிஷேக், இஷான் கிஷன், சூர்யகுமார், திலக், ஹர்திக், துபே, ரிங்கு, அக்‌ஷர், அர்ஷ்தீப், வருண், சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

News February 7, 2026

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்

image

செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோரை தொடர்ந்து மற்றொரு அதிமுக மூத்த நிர்வாகி தவெகவில் இணைந்துள்ளார். வட சென்னையை சேர்ந்த அதிமுக Ex MLA வி.எஸ்.பாபு விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், EPS-க்கு ஆளுமை இல்லை என தெரிவித்ததோடு, அதிமுகவின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!